Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகரசபைப் பிரிவிலுள்ள காத்தான்குடி 5ஆம் குறிச்சி வாவிக்கரையோரத்தை விஷமிகள் சிலர் அசுத்தப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கும் மக்கள், அதனைத் தடுப்பதற்காக, களத்தில் இறங்கியுள்ளனர்.
மேற்படி வாவிக்கரையோரத்தில், விசமிகள் சிலர், இரவு வேளைகளில் வந்து குப்பைகளை வீசிவிட்டுச் செல்வதாகக் குற்றஞ்சாட்டும் பிரதேச மக்கள், இதனால் தாம் பாரிய சுகாதாரப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
துர்நாற்றம் வீசக் கூடிய குப்பைகளே, அதிகளவு இங்கு கொட்டப்படுவதாகவும் இதனால் பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், வாவிக்கரையோரத்தில் முதலைகளின் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்தப் பகுதியில், இரண்டு பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இவற்றைக் கருத்திற்கொண்டேனும், வாவிக்கரையோரத்தில், குப்பைகளைப் போட வேண்டாமென, பிரதேச மக்கள் வலியுறுத்தி வந்த போதிலும் வெளியிடங்களிலிருந்து இரவு வேளைகளில் வரும் விஷமிகள், குப்பைகளை எறிந்துவிட்டுச் செல்வதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில், காத்தான்குடி நகர சபையின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரதேச மக்களின் கோரிக்கைகள் எவையும் செவிமடுக்கப்படாததால், வாவிக்கரையோரத்தைப் பாதுகாப்பதற்காக, பிரதேச மக்களே, களத்தில் குதித்துள்ளனர்.
வாவிக்கரையில் குப்பைகளைப் போடுவதை, கடந்த ஒருவாரமாக இப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் விழித்திருந்து தடுத்து வருகின்றனர்.
இரவு வேளைகளில் விழித்திருக்கும் மக்கள், குப்பைகளைப் போட வருபவர்களை விரட்டி வருகின்றனர்.
தினமும் 50 பேர் விழித்திருந்து, அவ்விடத்திலேயே சமைத்து உணவு உட்கொண்டு, இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
வாவிக்கரையோரத்தில் போடப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, அந்த இடத்தை சுத்திகரித்துத் தருமாறும் காத்தான்குடி நகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மேற்படி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமது பிரதேசத்தின் நலன்கருதி, அரசாங்கத்தின் அதிகாரிகளை எதிர்பார்க்காது, தாமாகவே களத்தில் இறங்கியுள்ள இந்த மக்களின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டியது என்று, அதிகாரிகள் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago