2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

வாவியில் ஆணின் சடலம் மீட்பு

Mayu   / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய முகமது கனிபா முகம்மது அஸ்மி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



குறித்த நபர் சுனயீனம் காரணமாக சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (27)  வீட்டை விட்டு வெளியேறி மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் உறவினர்கள் தேடிவந்த போதே வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X