எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மார்ச் 07 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை சீராகுவதற்காக விசேட நோன்பு நோற்று, பிராத்தனையில் ஈடுபடுமாறு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை என்பன வேண்டுகோள் விடுத்துள்ளன.
அசாதாரன நிலைமை நீங்குவதற்கும் சமாதானமானதும், சுமூகமானதுமான நிலைமை தோன்றுவதற்கும் ஐங்கால தொழுகைகளில் குனூத் அந்நாஸிலாவை நிலைமை சீராகும் வரை ஓதுமாறும்,முடியுமானவர்கள் நோன்பு நோற்று அல்லாஹ்விடம் அதிகமதிகம் இஸ்திஃபார் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும், வன்முறைகள் இடம்பெறுகின்ற பிரதேசங்களுக்கு அல்லது அப்பிரதேசங்களினூடாக பிரயாணங்கள் மேற்கொள்வதைத் தவிர்ந்துக் கொள்ளுமாறும், தேவையற்ற வீன் வதந்திகளைப் பரப்புவதை விட்டும் தவிர்ந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
38 minute ago
49 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago
56 minute ago
1 hours ago