2025 மே 02, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூன் 04 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆா்.ஜெயஸ்ரீராம், எச்.எம்.எம்.பர்ஸான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு  - பாசிக்குடா வீதி, பேத்தாழையில் நேற்று (03) மாலை இடம்பெற்ற விபத்தொன்றில், வாழைச்சேனையைச் சோ்ந்த எம்.என்.முஹம்மது நைறுாஸ் (வயது 18) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளாரென, கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன், வாழைச்சேனையிலிருந்து பாசிக்குடாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, சிறிய ரக பட்டா வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக, ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கல்குடா பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மெற்கொண்டதுடன்,  சந்தேகத்தின் பேரில் பட்டா வாகன சாரதியைக் கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .