2025 மே 08, வியாழக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி; மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

Editorial   / 2019 டிசெம்பர் 22 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி கிரான்குளம் பகுதியில்  நேற்று (21) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ், அதே திசையில் கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சைக்கிள் மீது மோதியுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் இழுத்துச் சென்ற நிலையில், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து சாம்பராகியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கடுக்காமுனையைச் சேர்ந்த  19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X