Princiya Dixci / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பகுதியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடியில் வசிக்கும் இராமகிருஷ்ணன் மயூரன் (வயது 27) எனும் இந்த இளைஞன், சந்திவெளியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, மாவடிவேம்பு பகுதியில் வைத்து எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டு, படுகாயங்களுக்குள்ளான நிலையில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
மாவடிவெம்பு பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago