2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; 5 பேர் காயம்

Freelancer   / 2022 நவம்பர் 28 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (27) காலை இடம்பெற்ற விபத்தில்
ஒருவர் உயிரிழந்ததுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்

முறக்கொட்டன்சேனை தேவபுரப் பகுதியைச் சேர்ந்த நல்லராசா நேசராசா (வயது 46) என்ற ஆறு
பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கரைவலை மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரத்தில் முறக்கொட்டான்சேனை
பகுதியில் இருந்து கிரான் நாகவத்தை கடற்கரைப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக ஐவர் உழவு
இயந்திரத்தில் சென்றுள்ளனர்.

இதன்போது, பிரதான வீதியில் இருந்து குறுக்கு வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்பும் போது
பின்னால் வந்த கார் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உழவு இயந்திரத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கார் சாரதி மற்றும் உழவு
இயந்திரத்தில் இருந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் பயணம் செய்தோர் களுதாவளை ஆலயத்துக்கு பூஜை ஒன்றுக்காக வந்துள்ளனர் என
தெரியவருகிறது.

காரின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் ஏனையவ இருவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்த சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனையின் பின்னர் உறவினர்கள் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X