2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை மயிலம்பாவெளியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளில் சென்றவர் மீது மோட்டார் சைக்கிளில் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

மயிலம்பாவெளி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியரான இம்மானுவெல் சந்திரகுமார் (வயது 65) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

படுகாயமடைந்த அவரை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வழியிலேயே, அவர் உயிரிழந்து விட்டாரென, உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .