2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி; இளைஞன் காயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில், வந்தாறுமூலை பகுதியில் நேற்று (02) இடம்பெற்ற விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் என்பதுடன், இளைஞன் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார் என, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள காயான்குடா கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கராசா சுதாகரன் (வயது 34) என்பவரே பலியாகியுள்ளார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜீவபுரம் பாலையடித்தோணாவைச் சேர்ந்த குருபரன் சுதர்ஷ‪ன் (வயது 25) என்ற இளைஞர்  காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விருவரும் சந்திவெளியிலிருந்து செங்கலடி நோக்கி செல்லும்போது வந்தாறுமூலையில் வைத்து வான் ஒன்றால் மோதுண்டமையால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X