2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹம்பாந்தோட்டையில் இன்று (03) அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் சிக்கி, காத்தான்குடி – பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமுனையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எம்.எஸ்.எம். லாபிர் (வயது 40) என்பவரே, இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.

நீண்டகாலமாக மீன் வியபாரத்தில் ஈடுபடும் இவர், மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கும் ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்புக்குமாக மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்த போதே, விபத்தில் சிக்கியுள்ளாரென, உறவினர்கள் தெரிவித்தனர்.

உடற்கூறாய்வுப் பரிசோதனைகள் இடம்பெற்ற பின்னர், நல்லடக்கத்துக்காக சடலதை, காத்தான்குடிப் பிரதேசத்துக்கு எடுத்து வரும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .