2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் நால்வர் படுகாயம்

Editorial   / 2018 ஜூலை 01 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணிப் பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் ஓட்டோ சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாக வந்த ஓட்டோ, நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியில்  மோதியே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்தில், படுகாயமடைந்த நால்வரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான, மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X