2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விமான நிலையம் திறந்து வைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மார்ச் 25 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த, மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு, சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று (25) அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டு, நினைவுப் பலகை திரைநீக்மும் செய்யப்பட்டு, சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. 

இந்த, வைபவத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க, செயலாளர் ரி.எஸ்.விதானகே, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், அலிசாஹீர் மௌலானா, சிவில் விமான சேவைகள் தலைவர் ஆனந்த விஜயகோன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின்  பணிப்பாளர், அதிகாரிகள், பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், சமய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த, நவீனமயப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து தினமும் கொழும்பு, இரத்மலானை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பவற்றுக்கான உள்ளுர் விமான சேவைகள் இடம் பெறவுள்ளன. இந்த விமான நிலையத்தில் பிரயாணிகளின் நன்மை கருதி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X