2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விளாவட்டவானுக்கு சுமார் ரூ.70 இலட்சம் ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2017 ஜூலை 06 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சமுர்த்தி மாதிரிக் கிராம அபிவிருத்தித் திட்டத்துக்கென வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட விளாவட்டவான் கிராமத்துக்கு, சுமார் 70 இலட்சம் ரூபாய்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பி.குணரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம், விளாவட்டவான் கிராமத்தில் இன்று நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

தொழில் துறையில் ஆர்வமுள்ள, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மீள அறவிடப்படாத முழு மானிய அடிப்படையில் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து, அவர்களை மேம்படுத்துவதே கிராம அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.

இத்திட்டம் தொடர்பில் தமது திணைக்கள உத்தியோகத்தர்கள் விசேட கவனம் செலுத்தி, கண்காணிப்பு மேற்கொள்வதுடன், ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இவர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் மிக விரைவில் வழங்கி வைக்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  இந்த வருடத்தில் வவுணதீவு, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சமுர்த்தி உற்பத்தி மாதிரிக் கிராம அபிவிருத்தித்; திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் விவசாயம், மீன்பிடி, சந்தைப்படுத்தல், சிறுகைத்தொழில், கால்நடை வளர்ப்பு உட்பட 163 திட்டங்களுக்காக 67 இலட்சத்து 35,000 ரூபாயும் மற்றும் இரண்டு வீடுகளின் புனரமைப்பு வேலைகளுக்காக 3 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தித் திட்டத்தில் உட்கட்டமைப்பு வேலைகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கு  எதிர்காலத்தில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மேலும் நிதி வழங்கப்படும் எனவும் அவர்  தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X