Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2018 ஜூன் 28 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சூழல் நேயத்துடன், விவசாய அபிவிருத்தி இலக்குகளை அடையக் கைகோர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்பூட்டல் எழுச்சிப் பேரணி, மட்டக்களப்பு - களுதாவளையில் இன்று (28) நடைபெற்றது.
விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு விரிவாக்கப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணி, களுதாவளை பிரதான வீதியில் அமைந்துள்ள இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டு, பிரதான வீதி வழியாகச் சென்று, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்துக்குச் செல்லும் வீதியைச் சென்றடைந்தது.
இதில் விவசாயத் திணைக்களத்தினர், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினர், பாடசாலை மாணவர்கள், சுகாதாரத்துறையினர், விவசாயிகள், பொலிஸார், அரச, அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, இரசாயன பாவனையைக் குறைத்தல் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், பேரணியின் தொனிப்பொருள் விளம்பரப் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், இயற்கை உர வகைகளின் பாவனைகளை அதிகரித்து, இரசாயன உர வகைகளை, கிருமி நாசனிகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக கலந்துகொண்டிருந்த அதிகாரிகளின் கருத்துகளும் இடம்பெற்றதுடன், இரசாயனப் பாவனைகளைத் தடுத்தல் தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் வீதி நாடகமும் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago