2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 மே 30 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான, வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிப்படைந்த விவசாயிகள், மட்டக்களப்பு நகரில் இன்று (30) காலை, பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்னால் ஆரம்பமான பேரணி, காந்தி பூங்கா வரை சென்று, அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அங்கிருந்து மாவட்ட செயலகம் வரை சென்ற விவசாயிகள், மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.

கடந்த 25ஆம் திகதி, நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து, உன்னிச்சைக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் சுமார் 6,000 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை, நீரில் மூழ்கியது. இதற்கு நட்டஈடு வழங்குமாறு கோரியும், இவ்விடயம் தொடர்பில் பூரண விசாரணை நடத்துமாறு கோரியுமே, விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகாத்தரைத் தாக்கிக் காயப்படுத்தியவர்களைக் கைது செய்யுமாறு கோரி, மட்டக்களப்பு நகரில் பாரிய எதிர்ப்பு ஊர்வலமும் ஆர்ப்பாட்டங்களும் இன்று (30) நண்பகல் இடம்பெற்றன.

கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமான எதிர்ப்பு ஊர்வலம், காந்தி பூங்காவை வந்தடைந்து, மணிக்கூண்டுக் கோபுரத்துக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

உன்னிச்சைக் குளத்தின் வான்கதவைத் திறக்கச் சென்ற நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் கடுமையாகத் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X