Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
'விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்கத்துக்கான எங்கள் குரல்" எனும் கருப்பொருளில் இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான விவாதப்போட்டி, மட்டக்களப்பு வந்தாறுமூலை வேல்ட் விசன் மண்டபத்தில், சனிக்கிழமை (24) நடைபெற்றது
ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் வெளிவிவகார அலுவலகத்தின் நிதி உதவியுடன் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தும் நல்லிணக்க பொறிமுறைகளை உறுதிப்படுத்தல் செயற்றிட்டத்துடன் இணைந்து, விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், இந்த விவாதப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கழகங்கள் 08 அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் 6 சுற்றுக்கள் நடைபெற்றன.
விவாத அரங்கில் நடுவர்களாக ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன், சட்டத்தரனி சரணியா ஜெயராஜா, கல்வியியலாளர் சீனித்தம்பி லோகேஸ்வரி ஆகியோர் செயற்பட்டனர்.
விவாதச் சுற்றின் தொடர்ச்சியாக இளைஞர் கழகங்களுக்கான விவாதப் போட்டிகள் இம்மாதம் இறுதியிலும் பாடசாலை மாணவர்களுக்கான விவாதப் போட்டிகள் செப்டொம்பர் மாதமும் நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago