2025 மே 23, வெள்ளிக்கிழமை

வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் 31ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நாடாளரீதியில் 339 வீடமைப்புக் கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பில்; 1,000 வீடுகள் உருவாக்கப்பட்டு வருவதாக, வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடாளரீதியில் 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017  ஜூலை வரையிலான காலப்பகுதியில்  339 வீடமைப்புக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  அவற்றில்  45,046 வீடுகள் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் 1,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட உதவி வீடமைப்புத் திட்டத்தின்படி, 20 கிராமங்கள் மற்றும் கொத்தணிக் கிராமங்கள் 14 உள்வாங்கப்படும் விதத்தில் 1,000 வீட்டு அலகுகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இலக்காக கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கென 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.  அனைத்து வீடுகளின் நிர்மாணப் பணிகளும் 2017 ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறும் உலக குடியிருப்பு தினத்துக்கு  முன்னதாக பூர்த்தி செய்வதற்கு இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அனைத்து வீடமைப்பு அபிவிருத்தி விடயங்கள் உட்பட வீடமைப்பு திட்டங்கள் சூழ அனைத்து அபிவிருத்தித் திட்டங்களை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறு, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சகல வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். ‪


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X