2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வீடு உடைத்து கொள்ளை; பெண்களும் ஆண்களும் கைது

Princiya Dixci   / 2022 ஜூலை 27 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

ஏறாவூர் பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து 8 கால் பவுண் நிறையுடைய தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இரு பெண்களும் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிச்சு நகர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 மற்றும் 45 வயதுடைய பெண்கள் உட்பட ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் மற்றும் இரு ஆண்களிடமிருந்து ஹெரோய்ன் போதைப்பொருளை மீட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை சந்தேகநபர்களிடமிருந்து மீட்டதுடன், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தங்கச் சங்கிலியை மட்டக்களப்பு நகர் நகைகடை ஒன்றில் அடகு வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டதையடுத்து, கொள்ளையிடப்பட்ட 8 கால் பவுண் தங்க நகைகளை பொலிஸார் மீட்டனர்.

ஏறாவூர், ஆர்.சி. வீதியிலுள்ள வீடு ஒன்றின் பின்பகுதி கதவை உடைத்து, அறையில் அலுமாரியில் இருந்த 8 கால் பலுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் உரிமையாளரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X