Princiya Dixci / 2021 மார்ச் 09 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் முறக்கொட்டான்சேனைப் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சைக்கிளொன்றில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் மீது ஓட்டோ மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற இந்த விபத்தில் மாவடிவெம்பு கிராம வாசியான செல்லன் அருணாச்சலன் (வயது 60) என்பவரே மரணித்துள்ளார்.
விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த முதியவர் முன்னதாக அருகிலுள்ள சற்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.
சடலம், உடற்கூராய்வுப் பரிசொதனையின் பின்னர் நேற்று (08) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .