2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வீதியோர மீன் வியாபாரத்தை தடுத்தமைக்கு எதிர்ப்பு

Freelancer   / 2022 நவம்பர் 30 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட வீதியோரங்களில் மீன்
வியாபாரிகள் மீன் விற்பனை செய்வதை நிறுத்துமாறு பிரதேச சபை ஞாயிற்றுக்கிழமை(27)
அறிவித்தமையைக் கண்டித்து, வியாபாரிகளால் செவ்வாய்க்கிழமை(29) எதிர்ப்பு நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.

அப்பகுதியிலுள்ள மீன் வியாபாரிகள், மீன் பெட்டிகளுடன் களுதாவளையில் அமைந்துள்ள
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் செவ்வாய்க்கிழமை(29) எதிர்ப்பு
நடவடிகையில் ஈடுபட்டனர்.

பொதுச் சந்தைகளில் வியாபாரத்தில் ஈடுபடும் மீன் வியாபாரிகள் மாலை 2 மணிக்குப் பின்னர்
வீதியோரங்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபடலாம் என்ற சபைத் தீர்மானத்தை தாம் ஏற்கனவே
எடுத்துள்ளதாக குறித்த பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் அங்கு தெரிவித்தார்.

எனினும் தமது மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வீதியோரங்களில் மேற்கொள்ளப்படும்
மீன் வியாபாரங்களைத் தடை செய்துள்ளதாக மீன் வியாபாரிகளிடம் பிரதேச சபையின்
செயலாளர் எஸ்.அறிவழகன் அங்கு தெரிவித்தார்.

ஒரு சபையிலே இரு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகவும், பொதுச் சந்தையில் மீன்
வியாபாரத்தில், ஈடுபடும்போது தாம் செலுத்தும் வரிகளுக்கு இதுவரையில் பற்றுச்சீட்டு
வழங்குவதில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

காலையில் பிடிக்கப்படும் மீன் மதியம் வரை விற்று விட முடியாது, அதனை மாலையிலும்
விற்றால்தான் எமது வாழ்வாதாரம் பாதிக்காது, இல்லையேல் மற்று நாள் மீனை வைத்திருந்தால்
அவை அழுகிவிடுகின்றன எனவும் மீன் வியாபாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

குறித்த இடத்துக்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
அபஜவிக்கிரம மீன் வியாபாரிகளிடம் கலந்துரையாடி அனைவரையும் பொலிஸில் முறைப்பாடு
செய்யுமாறு தெரிவித்தார்.

தாம் பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு மீண்டும் வீதியோரங்களில் வியாபார
நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்து கலைந்து சென்ற வியாபாரிகள்,
செவ்வாய்கிழமை மாலை வரையும் வீதியோரங்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டமை
குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X