Editorial / 2022 ஜூன் 28 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரமாநகர் கிராமத்தில் வீடொன்றின் யன்னலை உடைத்துக்கொண்டு நேற்றிரவு உள் நுழைந்த திருடன், பணம், நகை மற்றும் பெறுமதியான பொருட்கள் எவற்றையும் திருடாது, வெற்று எரிவாயு சிலிண்டரை மட்டும் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய நாட்களில் இது போன்ற மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வீரமாநகர் மற்றும் உப்பூறல் பகுதிகளில் வசிக்கும் சிலர் வெற்றுச் சிலிண்டர்களுக்கு பத்தாயிரம் தொடக்கம் இருபத்தைந்தாயிரம் வரை கொடுத்துக் கொள்வனவு செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரவுப் பிரச்சினைகள் காரணமாக சம்பவம் தொடர்பான பொலிஸில் முறைப்பாடுகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

8 minute ago
11 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
1 hours ago
1 hours ago