2025 மே 23, வெள்ளிக்கிழமை

வெளியேறுமாறு மாணவர்களுக்கு உத்தரவு

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாமூலை வளாக நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன், இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 63ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், செவ்வாய்கிழமை (08) பிற்பகல்,  நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டனர்.

இதன்காரணமாக, பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைள் முற்றாகத் தடைப்பட்டதுடன், நிர்வாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான சூழல் இல்லையெனக் கோரி, கல்விசாரா ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நிர்வாகக் கட்டத்தை முற்றுகையிட்டு, நிர்வாக நடவடிக்கைளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர் என, இதற்குத் தலைமை தாங்கும் 19 மாணவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்து.

இதனடிப்படையில், குறித்த வழக்கை விசாரணை செய்த பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன், மாணவர்கள் நிர்வாகக் கட்டடத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X