Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 16 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுகின்ற வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக நீர் முகாமைத்துவத்தை மேற்கொண்டு, வெள்ள நீரை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன், மஹாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழ், “வானிலை பின்னடைவு மேம்பாட்டுத் திட்டம்” எனும் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
இது தொடர்பான சாத்தியக் கூறுகளை சம்மந்தப்பட்ட தரப்பினருக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்றது.
இதன்போது வெள்ள அனர்த்தத்தைக் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது கவனிக்கப்படவேண்டிய பொருளாதாரம், சூழல், வாழ்வாதாரம், சமுகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிரதான விடயங்களும் அவற்றுக்கிடையிலான உப விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு, தொழில்நுட்பப் பிரிவினருக்கும் சம்மந்தப்பட்ட திணைக்கள பங்குதாரர்களுக்குமிடையே கருத்துகள் பரிமாறப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு வாவி கடலுடன் கலக்கும் கல்லாறு மற்றும் டச்பார் முகத்துவாரங்களின் அபிவிருத்தி, சந்திவெளி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள புதிய கால்வாய், கிரானில் அமைக்கப்படவுள்ள புதிய பாலம், சித்தாண்டி மற்றம் ஏ-5 தொடக்கம் ஏ-15 பிரதான பாதைகளிலும், தாழ்நிலப்பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ள நீர் அணை மதில்கள் மற்றும் மகிழவட்டவான் நீர்த்தேக்கம் என்பன உள்வாங்கப்பட்டுள்ளன.
இவைதவிர, உன்னிச்சை அணைக்கட்டை உயர்த்துதல், தோணாக்கள் புனரமைத்தல், லாவன்யா நீர்த்தேக்கம் மற்றும் கொடபத்தடமன நீர்த்தேக்கம் அமைத்தல் போன்ற திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு சாதக, பாதக நிலைகளை ஆராய்ந்து, மீள் பரிசீலணை செய்யப்பட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னரே, இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
12 minute ago