Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி, மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில், விழிப்புணர்வுப் பேரணியொன்று, இன்று (15) நடைபெற்றது.
மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ். டினேஸ் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார், மாவட்ட சமூக சேவைகள் தலைமை அதிகாரி எம். அலியார், மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிராந்தியத் தலைவர் எஸ். சடாச்சரராஜா ஆகியோர் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள், தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஆசிரியர்கள், நிர்வாகிகள், மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி, இந்துக் கல்லூரி, சிவானந்தா தேசியப் பாடசாலை, விவேகானந்தா மகளிர் வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் மாணவ - மாணவிகள், ஆசிரியர்களும் இப்பேரணியில் பங்குகொண்டனர்.
கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதொரு வாய்ப்பை, உலகுக்குத் துலாம்பரமாக வெளிச்சமிட்டுக் காட்டுவதே, இவ்வெள்ளைப் பிரம்பு தினமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
39 minute ago
40 minute ago