Princiya Dixci / 2022 ஜூலை 27 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் வேலைக்காரியாக கடமையாற்றி வந்த பெண் ஒருவருக்கு பிறந்த சிசு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து வருடங்களின் பின்னர் வைத்தியர் ஒருவர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் நேற்று முன்தினம் (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர், மேல்மாடி வீதியில் வீடு ஒன்றில் வாடகைக்கு பெற்று தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், அவர் அம்பாறை - மத்தியமுகாமைச் சேர்ந்த 38 பெண்ணை தனது வீட்டு வேலைக்கு அமர்திய நிலையில், 2017 மார்ச் 26ஆம் திகதி குறித்த வேலைக்காரிக்கு ஆண் சிசு பிறந்துள்ளது.
அதனை சீலையால் சுற்றி, வீட்டின் கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில், வேலைக்காரிக்கு தொடர்ந்து இரத்தப் போக்குக் காரணமாக மார்ச் 26ஆம் திகதி மட்டு. போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மார்ச் 31ஆம் திகதி தனது கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு வைத்தியர் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் கிணற்றை சோதனையிட்டனர்.
இதன்போது கிணற்றில் இருந்து சிசுவின் சடல்தை மீட்டதுடன், வேலைக்காரியையும் கைது செய்து, விசாரணையை முன்னெடுத்துனர்.
இதன்போது, சிசு தனக்கும் வைத்தியருக்கும் பிறந்தாகவும் வைத்தியர்தான் வீட்டில் மகப்பேற்றை நடத்தியதாகவும் பின்னர் சிசிவை தான் கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதேவேளை, தனக்கும் சிசுவின் பிறப்பு மற்றும் இறப்புக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என வைத்தியர் தெரிவித்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய சிசுவின் இரத்த மாதிரியும் வைத்தியரின் இரத்த மாதிரியையும் பெற்று அரச பகுப்பாய்வுக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த மரபணுபரிசோதனையில் குறித்த வைத்தியரின் இரத்த மாதிரியும் சிசுவின் இரத்த மாதிரியும் ஒன்று எனவும் வைத்தியருக்கு பிறந்த சிசு என பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட அறிக்கையை அரச பகுப்பாய்வு திணைக்களம் பொலிஸாருக்கும் நீதிமன்றுக்கும் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, மட்டு. பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் சந்திரகுமார தலைமையிலான பொலிஸார் தொடர் விசாரணையில் திங்கட்கிழமை கண்டி வைத்தியசாiலையில் கடமையாற்றிவரும் குறித்த வைத்தியரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து, தனக்கு பிறந்த சிசுவை மறுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ததுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
3 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago