2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பர்’

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கிடையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்காவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 2,000க்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் அவர்களது குடும்ப உறவினர்களுடன் சேர்ந்து, ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பார்கள் என, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அலின் தலைமையில், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவில் நேற்று (02) மாலை ஒன்று கூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாகத் தமது கோரிக்கைகளை உள்ளிடக்கிய கடிதங்களை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான கட்சிகளைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X