2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வைத்தியசாலையின் குறைபாடுகள் ஆராய்வு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்  

வாழைச்சேனை வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அங்கு விஜயமொன்றை, இன்று (17) மேற்கொண்டார். 

இதன்போது வைத்தியசாலைப் அத்தியட்சகர் வைத்தியர் திருமதி இரங்க ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து, நிலைமைகளைப் பார்வையிட்டார்.

வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை குறித்து வைத்தியசாலை அத்தியட்சகரால் தெரிவிக்கப்பட்டதுடன், அவை நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில், குறிப்பிட்ட நோயாளிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், தொழில்நுட்ப இயந்திர வசதிகள், பிணவறை, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்றன தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டன. 

அத்தியட்சகரால் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடி, அவர்கள் மட்டத்தில் தீர்க்கப்படக் கூடிய விடயங்களுக்கு உடன் தீர்வு காண்பதற்கும், ஏனைய விடயங்கள் தொடர்பில் மத்திய அரசின் அமைச்சர்களைத் தொடர்புகொண்டு, இயன்ற செயற்பாடுகளை மேற்காள்வதற்கும் ஆவண செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

பின்னர் வாழைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ரீ.எஸ்.சஞ்ஜீவை சந்தித்து, பிரதேசத்தின் சுகாதார நிலைமைகள் மற்றும் டெங்கு நிலைமைகள் தொடர்பிலும் அவர் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X