Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில் இரண்டு பள்ளிவாசல்களில் இடம்பெற்ற படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவு தினமாக ஷுஹதாக்கல் தினம், நாளை மறுநாள் (03) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு ஷுஹதாக்கல் தினத்தையொட்டி, படுகொலை இடம்பெற்ற பள்ளிவாசல்களான காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாசல், ஹுஸைனிய்யா பள்ளிவாசல்களில் குர்ஆன் ஓதுதல் பிரார்த்தனை இடம்பெறவுள்ளது.
அத்துடன், காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் அந்தப் பள்ளிவாயல் மஹல்லா பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்கள், மௌலவி ஹாபிழ் பட்டம் பெற்ற மாணவர்கள், துறை சார்ந்த பட்டங்களைப் பெற்றவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டவுள்ளனர் என, அப்பள்ளிவாசல் தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம் லெவ்வை தெரிவித்தார்.
மேற்படி இரண்டு பள்ளிவாயல்களிலும் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதியன்று, புனித இஷாத்தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 103 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago