Freelancer / 2022 செப்டெம்பர் 24 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதி செயின் வீதி சந்தியில் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (23) மாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் இவர் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் நிந்தவூர் 9 பிரிவினை பகுதியை சேரந்த 18 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 4 கிராம் 200 மில்லிகிராம், சந்தேக நபர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள், ஒரு தொகுதி பணம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. (R)
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago