2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கிளங்கன் வைத்தியசாலைக்கு 70 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் அமைக்க இந்திய அரசு நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ்.குவால்தீன்)

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அருகில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் புதிதாக வைத்தியசாலைக் கட்டிடமொன்றை கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது.

இப்புதிய கட்டிடத்திற்கான ஆரம்ப வேலைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என இந்திய பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரா இன்று காலை தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தானும் கண்டி உதவித் தூதுவர் ஆர்.கே.மிஸ்ராவும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்குச் சென்று அவற்றைப் பார்வையிட்டதாகவும்  அத்தோடு வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் நிஹால் வீரசூரிய  வைத்தியசாலை வைத்தியர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடி வைத்தியசாலைகளின் சேவைகளை கேட்டறிந்து திருப்தியடைந்ததாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வைத்தியசாலையை மேலும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு சுமார் 700 மில்லியன் ரூபாய் செலவில் 150 கட்டில்களைக் கொண்ட புதிய வைத்தியசாலையொன்றினை கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது.

இப்புதிய கட்டிடத்திற்கான ஆரம்ப வேலைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X