2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

குளவிகள் கொட்டியதால் 28 பெண்கள் பாதிப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ )
 
ஹட்டன் டிக்கோயா லெதண்டி தோட்டத்தில் இன்று சனிக்கிழமை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்  தொழிலாளர்களைக் குளவிகள் சூழ்ந்து தாக்கியதில் 28 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டுச்சென்ற போது வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்ற 19 பேர் உரிய சிகிச்சைக்குப்பிறகு வீடு திரும்பியுள்ளனர் .

மேலும் 9 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப்பெற்று வருகின்றனர். லெதண்டி தோட்ட தேயிலை மலைகளில் குளவி கூடுகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X