2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

“அமைச்சரவை அனுமதியுடன் கிராமங்களையும் அபிவிருத்தி செய்வேன்”

Kogilavani   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ஆ.ரமேஷ்

“பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்வது போன்று கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், அதற்கு சிலர் முட்டுக்கட்டையாக உள்ளனர். இவ்விடயத்தை, பிரதமரின் கவனத்துக்கு கொண்டுச்செல்லவுள்ள அதேவேளை, எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதியுடன் கிராமங்களையும் அபிவிருத்தி செய்வேன்” என்று, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

“கடந்த அரசாங்கத்தில் கருப்பு வான், வெள்ளை வான் என்பன, மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்தன. ஆனால், இந்த அரசாங்கத்தில, அத்தகைய தொல்லைகள் இல்லை. மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். நாடு கடன் சுமையை எதிர்கொண்டு இருக்கும் இவ்வேளையில், நாட்டை கடன் சுமையிலிருந்து மீள்வதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் அரும்பாடுபட்டு வருகின்றனர். இத்தகையதொரு நிலையிலேயே, நாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் கூறினார்.

பத்தனை, போகாவத்தை தோட்டத்தில் 60 தனி வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று( 23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

“நான், மூவின மக்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றவன். என்னிடம் இன, மொழி, மத வேறுபாடுகள் கிடையாது. எனது அம்மா, அப்பா ஆகியோரும், நான் பிறந்த இடத்தில் மூவினத்தினருடனும் நண்பர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

அதேபோலவே நானும் வாழ்ந்து வருகின்றேன். கிராம பகுதிக்யிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், கிராம பகுதிகளில் எத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முயன்றாலும் சில அரசியல்வாதிகள் அதற்கு முட்டுக்கட்டையாகவே இருக்கின்றனர்.

கிராமங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். இவ்விடயம் தொடர்பில், பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமைச்சரவை அங்கிகாரத்துடன் கிராமங்களையும் அபிவிருத்தி செய்வேன்.

இந்த நாட்டிலுள்ள மூவின மக்களும், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும். நாடு, பல மில்லியன் ரூபாய் கடன்சுமையை எதிர்கொண்டுள்ள நிலையிலும்கூட, ஜனாதிபதியியும் பிரதமரும் நாட்டின் அபிவிருத்தியில் கவனஞ் செலுத்த வருகின்றனர் ” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .