Sudharshini / 2016 ஜூன் 07 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி மாநகர சபைக்கு 520 இலட்சம் ரூபாய் செலவில் கழிவுப் பொருட்களை சேகரித்து முகாமை செய்யும் மத்திய நிலையம் ஒன்றை அமைக்க சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இரத்தினபுரி நகரின் கனாந்தொல பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்நிலையத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் திங்கட்கிழமை (06) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இரத்தினபுரி நகரிலும் அதை அண்மித்த பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள கழிவுப்பொருள் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தமைக்கு அமையவே, மேற்படி கழிவுப் பொருட்களை சேகரிக்கும் முகாமை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தினூடாக கொம்போஸ் உரம், இயற்கை வாய்வு மற்றும் பல வகையான பொருட்கள் மீள்சுழற்சி செய்யப்படவுள்ளன.
இரத்தினபுரி நகரை அண்மித்த பிரதேசங்களில் நாளொன்றுக்கு 35டொன் கழிவுப் பொருட்கள் சேர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .