Sudharshini / 2016 மே 27 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்,எஸ்.கணேசன், எஸ்.சதீஸ்
புகையிலை தூள் அடங்கிய ஒருதொகை என்.சீ டின்களுடன் ஒருவரை பொகவந்தலாவை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (27) அதிகாலை கைது செய்துள்ளனர்.
கிளானி தோட்டத்திலிருந்து பொகவந்தலாவை நகருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 250 என்.சீ டின்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கும், மாணிக்கக்கல் அகழ்வு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் விற்பனை செய்யவதற்காகவே, மேற்படி போதைபொருள் அடங்கிய டின்களை கொண்டுச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .