2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'சம்பளத்துடன் நிலுவைக் கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும்'

Kogilavani   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

'கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை 90 சதவீத இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக கூறுகின்ற தொழிற்சங்கங்கள், கடந்த 17 மாதங்களுக்கான நிலுவைக் கொடுப்பனவு மற்றும் ஏனையக் கொடுப்பனவுகள் வழங்கப்படுமா என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்' என இலங்கைத் தொழிலாளர் சங்க சிரேஷ்ட உபதலைவர் கு.ராஜேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

'தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய உரிமைகள் தொடர்பாக கைச்சாத்திடப்படும் கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, கடந்த 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையினால் 17 மாதங்களாக இப்பேச்சுவார்த்தை இழுபறிநிலையிலே இருந்து வந்தது.

இருந்தும் கடந்த இருவாரங்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்;தையில் இணக்கப்பாடுகள் பல எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தநிலை ஆரம்பத்தில் காணப்பட்டிருந்தால் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார சிக்கலில் இருந்து ஓரளவேனும் விடுபட்டிருப்பார்கள்.

17 மாதங்களுக்கு பின் ஒரு தொகையேனும் சம்பள உயர்வாக கிடைக்கப் போகின்றமையை எமது இ.தொ.சங்கம் வரவேற்கின்றது. இருந்தும் பேச்சுவார்த்தை  காலப்பகுதியில் தொழிலாளர்களுக்கு மீள் நிலுவை கொடுப்பனவு (எரியஸ்) வழங்கப்படுவது கடந்த காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த ஒன்றாகும்.

இந்த நிலையில் இம்முறையும் 17 மாதங்களுக்குறிய மீள்நிலுவை கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும். இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்வேண்டும்' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .