2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

“தீபாவளி முற்பணமாக ரூ.15,000 வேண்டும்”

Kogilavani   / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாயை பெற்றத்தர வேண்டுமென கோரி,  ஹட்டன், எபோட்சிலி தோட்ட மக்கள் இன்று (2) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ரூபாய் சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வை பெற்றுத்தராத பட்சத்தில் தொழிலாளர்களாகிய நாம் தொழிற்சங்கங்களுக்கு வழங்கி வரும் சந்தாப் பணத்தையும் நிறுத்துவோம்' என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, “தீபாவளியை முன்னிட்டு 15000 ரூபாயை முற்பணமாக தரவேண்டும்.  தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இதுவரை 7 பேச்சுக்கள் நடைபெற்றுவிட்டன. வாக்களியுங்கள் 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம். ஆனால், இதுவரை சம்பள உயர்வு பெற்றுகொடுக்கப்படவில்லை.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயத்தில் தலையிட்டு சம்பள உயர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல்  8 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்றவேண்டாம்' என தொழிலாளர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .