2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘ நான் முன்னெடுப்பேன்’

Niroshini   / 2017 மார்ச் 15 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பெருந்தோட்டப்புற மாணவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக முன்னேற்ற தேவையான வேலைத்திட்டங்களை நான் தொடர்ந்தும் முன்னெடுப்பேன்” என்று, ஊவா மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

பசறை - எல்டெப் தமிழ் வித்தியாலய மாணவர்களின் குடிநீர் பிரச்சினையினை தீர்க்கும் வகையில், குடிநீர் குழாய்களை அமைத்து, அதனை திறந்து வைக்கும் நிகழ்வு, இன்று (15) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பெருந்தோட்டப்புற பாடசாலைகளை பொறுத்த வகையில் பாரிய பலதரப்பட்ட பிரச்சினைகளை மாணவர்கள் முகம்கொடுத்து வருகின்றனர்.

அவ்வகையில், அப்பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வினைப் பெற்றுக்கொடுத்து பெருந்தோட்டப்புற மாணவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக முன்னேற்ற தேவையான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்” எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .