2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

150 பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட 150 பாடசாலைகளின் வாசிகசாலைகளுக்கு, ஆங்கில நூல்கள் வழங்கும் நிகழ்வு, ஹட்டன் இந்துமகா சபை கலாசார மண்டபத்தில், நேற்று முன்தினம்  இடம்பெற்றது.

மலையக மாணவர்களின் ஆங்கில வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், டிக்கோயா ரொட்டரி கழகத்தினர் இலவசமாக இந்நூல்களை வழங்கி வைத்தனர்.

டிக்கோயா ரொட்டரி கழகத்தினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு, கொழும்பு ஜெயா புத்தக சாலையும், ஸ்ரீ இராமாகிருஷ்ண மிஷனும் அனுசரணை வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் ஸ்ரீ இராமாகிருஷ்ண மிஷனின் தலைவர் சர்வரூபாநந்த மகராஜ், டிக்கோயா ரொட்டரி கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X