Kogilavani / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
'பொலிஸ் நிலையம் என்பது மக்களின் பாதுகாப்புக்காகவே அன்றி அவர்களின் உயிரை பறிக்கும் இடமல்ல. எனவே, பொலிஸ் காவலில் இருக்கின்ற ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுவதானது, பொலிஸாரின் அசமந்த போக்கையே காட்டுகின்றது' என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குற்றச்செயலொன்றுக்காக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், புஸ்ஸல்லாவை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில்; வைக்கப்பட்டிருந்த 28 வயது இளைஞன், ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டு பின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதில் மேலும் கூறியுள்ள அவர்,
' பொதுமக்களை பாதுகாப்பதும் நாட்டின் சமாதானத்தை நிலைநிறுத்துவதுமே பொலிஸாரின் கடமையாகும். பொலிஸார் மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டியவர்கள். பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகின்றவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்லர். அதனை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றமே.
ஒருவர் ஏதோ ஒரு குற்றத்துக்காக அல்லது சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்படும் பொழுது அவர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு உரிமை இல்லை. அவர்களை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு இருக்கின்றது' என்றார்.
'ஆனால், பொலிஸ் காவலில் இருக்கின்ற ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வது என்பது பொதுமக்களுக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தும். இச்சம்பவத்துக்காக பொலிஸ் அதிகாரிகள் இருவர் வேலை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது மட்டும் இதற்கு உரிய தீர்வாக அமையாது. இது தொடர்பாக உரிய முறையில் சுயாதீனமாக விசாரணைகள் மேற்கொண்டு உண்மை நிலைமையை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த விடயத்தில் பொதுமக்களும் சற்று நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் மேலும் மேலும் தவறுகளை செய்யக்கூடாது. இந்த விடயம் தொடர்பில் உரியவர்களுக்கு நியாயம் கிடைக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுப்பார் என நாம் எதிர்பார்க்கின்றோம்' என்றார்.
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago