2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'பதுளையில் சிறு தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்'

Kogilavani   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டி.ஷங்கீதன்

'பதுளை மாவட்டத்தில் சிறு தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க நான் தயாராகவுள்ளேன்' என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

'பதுளை மாவட்டத்தில் ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்து 55 முதல் 60 ரூபாய்க்கு கிடைப்பதாக அறிந்துகொண்டேன். ஆனால், அது போதுமான தொகையல்ல. பிற மாவட்டங்களில் 70 முதல் 80 ரூபாய்க்கு ஒரு கிலோகிராம் கொழுந்தை பெற்றுக்கொள்ள முடிகின்றது. எனவே, பதுளை மாவட்டத்திலும் இத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும்' எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பதுளை மாவட்டத்தில் 1,000 சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு, உர மானியத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

'பதுளை மாவட்ட சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் இலங்கையின் தேசிய வருமானத்தில் 7 வீதமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். சிறு தேயிலை தோட்ட உரியைமாளர்கள் 30,000 பேர் வரை உள்ளனர்.

எனவே, சிறு தேயிலை உற்பத்தியை முறையாக மேற்கொண்டால் இன்னும் அதிகமான வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.

'தேயிலை உற்பத்தியின்போது, தேவையற்ற இரசாயனங்களை பயன்படுத்தியமைக்காக இம்மாவட்டத்தில் இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒரு காலமும் நான் அனுமதி வழங்கமாட்டேன். தரமான தேயிலையை உற்பத்தி செய்ய வேண்டும்  என்பதே எமது இலக்கு' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .