Niroshini / 2016 ஜூன் 04 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
கணடி நகர சபை எல்லைக்குள் வசிக்கும் மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 37 குடியிருப்புகளில் வசிக்கும் மகக்ளுக்கு 2,500 மாடி வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை நேற்று தெரிவித்தது.
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் கண்டி கட்டுகஸ்தோட்டையல் இடம்பெற்ற கண்டி நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தின் போதே நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் இத்திட்டத்தை அறிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
“கண்டி நகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு பொருத்தமான இடத்தில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை என்றும் இங்கு முன் வைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் அதற்கு பொருத்தமாக இருக்கும்” என்றும் தெரிவித்தார்.
இவ் வீட்டுத் திட்டத்தை முன் வைத்து கருத்து தெரிவிதத்த நகர அதிகார சபையின் திட்டமிடல் அதிகாரி ரவீ அமரசிங்க,
“கண்டி நகர எல்லைக்குள் ஆபத்தான நிலையிலுள்ள 37 குடியிருப்பகள் இனம் கானப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 2,500க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன.
இவர்களுக்கு பாதுகாப்பான முறையில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கே இம் மாடி வீட்டுத் திட்டம் அமுல்படுத்தபடவுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், இத் திட்டத்துக்கு குறைந்தது 12,500 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அதில் ஒரு பகுதியை வீட்டின் உரிமையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டாலும் மிகுதித் தொகையை பெற்றுக் கொளவ்தவற்கு அரசாங்கத்தின் ஆலோசனை தேவை என்றும் தெரிவித்தார்.
நகர மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் முக்கியமானதும், முதன்யைனதுமான அவசியமாகும் என்று கூறிய அமைசச்ர் ஹக்கீம், இத் திட்டத்தினை பிரதமருடனான சந்திப்பில் சமர்ப்பித்து மேற் கடட் நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .