Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 மார்ச் 15 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
“சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் திகதியன்று, பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையினை அரசாங்கம் வழங்க வேண்டும்” என்று, விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி தெரிவித்தார்.
விவசாய தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ் பதுளை தலைமைப் பணிமனையில் 14 ஆம் திகதியன்று நடைபெற்ற மகளிர் தின நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தோடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், ஆரம்பத்திலிருந்தே, பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தியும் அவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் ஆக்கப்பூர்வ செயற்பாடுகளை முன்னெடுத்தவருகின்றது.
இதனடிப்படையில், சுதந்திர தினத்தன்று தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை, விவசாய தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ளது. அத்துடன், தோட்ட தொழிலாளர்களுக்கு பெயர் பதிவு அட்டை வழங்கப்படுவது, சம்பள பதிவு அட்டை வழங்கப்படுவது போன்ற செயற்பாடுகளும் எமது அமைப்பின் முயற்சியினாலேயே பெற்றுக்கொடுக்கின்றது.
இதுபோன்று, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 08ஆம் திகதியும் பெருந்தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்.
இதனை மகளிர் தினத்தில் பிரகடனம் செய்திருப்பதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் கவனத்துக்கும் இப்பிரகடனத்தை அனுப்பி, நேரடியாகவும் சென்று வலியுறுத்தவுள்ளோம்.
அத்துடன், ஏனைய பெண் தொழிலாளர்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்” என்றார்.
மேலும், பெண் தொழிலாளர்களுக்கு 06 மணித்தியால வேலை நேரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான தொழில் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு காப்புறுதி திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பாலியல் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களை மேற்பார்வை செய்வதற்கு,பெண் மேற்பார்வையாளர்களே ஈடுபடுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அநேகமாக எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08ஆம் திகதியில் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையினை வழங்க, வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்வதற்கு எமது அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளது. அதற்கான குழு ஒன்றும் மகளிர் தரப்பில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது” எனவும் தெரிவித்தார்.
13 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago