2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

'மக்களின் போராட்டங்களுக்கூடாக மலையக தலைமைகள் குளிர்காயக்கூடாது'

Kogilavani   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

'போராட்டத்தினால் மட்டுமே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பது தொழிலாளர்களுக்கென எழுதப்பட்ட விதியாகும். இந்நிலையில், மலையகத்தில் தொடரும் போராட்டங்களை வைத்துகொண்டு அரசியல் தலைமைகள் குளிர்காயகூடாது' என இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் பேரவையின் உபதலைவர் சு.ப.சுப்ரமணியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறியுள்ள அவர், 'தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில், காலம் கடந்த ஞானம் அவசியமாகின்றது. அரசியல் மற்றும் தொழிற்சங்க சானக்கிய தன்மைக்கு அப்பால் செனறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையினால்  சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

1993ஆம் ஆண்டு முதல் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளமானது கூட்டொப்பந்தப் பேச்சின் மூலமாக நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனால், வழமைக்கு மாறாக இம்முறை இப்பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. தொழிலாளர்களிடத்தில் காணப்படும் ஒற்றுமை, அவர்களை வழிநடத்தும் அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகளிடத்தில் இல்லாமையே இதற்கு காரணம்.   நடைபெற்று வரும் போராட்டங்களை இதற்குமுன்னுதாரணம் காட்டலாம்' என்றார்.

'தொழிலாளர்களின் போராட்டங்களில் ஓர் ஒற்றுமையை காணமுடிகின்றது. இதனை அடிப்படையாக வைத்துகொண்டு, காலம் கடந்த ஞானத்துடன் சம்பள உயர்வு விடயத்தை அணுகவேண்டுமேத் தவிர, கண்கெட்டப் பின்னர் சூரிய நமஸ்காரம் எதற்கு  என சம்பந்தப்பட்ட தரப்பினர் ஓரம் போய்விடகூடாது.

மக்கள் சக்தி வலுவிழக்கவில்லை. அதேபோன்று போராட்டத்தில் தான் உரிமையை பெறமுடியும் என்பது தொழிலாளர்களுக்கு எழுதப்பட்டது' என அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .