Sudharshini / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா. திருஞானம்
சந்தா அரசியல் காரணமாக தான் மலையகத்துக்கான அரசியல் தலைமைத்துவம் ஒரு குறிப்பிட்ட பிரதேச வரையரைக்குள் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டி குயின்ஸ் ஹோட்டலின் கேட்போர் கூடத்தில், அவரை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சு பதவிகளை பெறுபவர்கள், தங்களின் நிலையை தக்க வைத்துக்கொள்ள குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதனால், அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து சேவை செய்யும் ஓர் அரசியல் தலைமைத்துவம் இன்றி, மலையகம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது.
இந்நிலையிலேயே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக முழு மலையக்துக்கும் தற்போது சிறந்தவர்கள் தெரிவாகியுள்ளனர். நாடு முழுவதும் பரந்து வேலை செய்யும் அமைச்சுக்கள் வழங்கப்பட்டள்ளன. இதனைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்வதின் மூலமாவே மலையக மக்களின் உரிமைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். கண்டி மாவட்டத்தில் கடந்த 15 வருட காலமாக நிலவிய பிரச்சினைகள் தற்போது மூட்டைக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை 05 நாட்களிலோ 05 வாரங்களிலோ அல்லது 05 மாதங்களிலோ நிவர்த்தி செய்ய முடியாது.
தற்போது நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற கட்டமைப்புக்குள் 06 நாடாளுமன்ற உறுப்புரிமையின் கீழ் 03 அமைச்சுக்களை கொண்டு சேவை செய்து வருகின்றோம். இதன் மூலம் மலையகத்துக்கும் முழு நாட்டுக்கும் எங்கள் சேவை தொடரும்' என்றார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026