2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

“வேலையற்ற மலையகப் பட்டதாரிகளை ஏமாற்ற வேண்டாம்”

Kogilavani   / 2017 மார்ச் 21 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மலையகத்தில் வேலையற்று இருக்கும் சகல பட்டதாரிகளுக்கும், தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித்தலைவரான ராஜமணி பிரசாந்த் தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்

“மலைநாட்டு புதிய கிரா­மங்கள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சு, வேலையில்லாப் பட்டதாரிகளின் தகவல்களை திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆனால், இது தேர்தலை குறிவைத்து இளைஞர்களை ஏமாற்றும் நடவடிக்கையாக இருக்க கூடாது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த காலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுத்தது.

தற்போது அமைச்சரவையில் இருப்போர் அரசியல் பேதமின்றி, வேலையற்ற 600 மலையக பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பட்­ட­தா­ரி­க­ளுக்கு, அரச நிறு­வ­னங்­களில் எந்­தெந்த துறை­க­ளில் வேலை வாய்ப்­புக்கள் இருக்­கின்­றன என்ற தக­வல்­களை, ஊடகங்கள் துல்­லி­ய­மாக கட்­டு­ரையில் குறிப்­பி­டப்­பட்­டிந்­த­ன. அவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, நியமனங்களை பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .