2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘விவசாயத்தை புதுப்பிக்க அரசாங்கம் உதவ வேண்டும்’

Niroshini   / 2017 மார்ச் 15 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்
மலையகத்தில் பெய்து வரும் அடைமழைக்காரணமாக, விவசாய காணிகள் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், அழிவடைந்த விவசாயத்தை மீண்டும் மேற்கொள்வதற்கான உதவியை அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 குறிப்பாக நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை, மன்றாசி, டயகம ஆகிய பகுதிகளில் நேற்று மாலை பெய்த கடும் மழையால், அப்பகுதியில் உள்ள ஆற்று நீர் பெருக்கெடுத்ததில், விவசாய காணிகளில் பயிரிடப்பட்ட மரக்கறிவகைகள் அனைத்தும் வெள்ளத்தில் அல்லுண்டுபோய்யுள்ளது.

இதனால் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

இதேவேளை, வெள்ளம் நீர் தோட்டங்களில் தேங்கி நின்றதால் கிழங்கு வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது மரகறிவகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விவசாயத்தின் ஊடாக வரும் வருமானத்ததை நம்பி வங்கி கடன் மற்றும் தங்க நகைகளை அடகு வைத்து விவசாயத்தை மேற்கொண்டவர்கள் பாரிய நட்டத்தினை எதிநோக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிப்பதுடன், மீண்டும் விவசாயத்தினை மேற்கொள்ள அரசாங்கம் உதவி செய்ய வேண்டுமெனவும் இவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .