2025 ஜூலை 02, புதன்கிழமை

வயோதிபரை காணவில்லை

Kogilavani   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜிதா

லிந்துலை, வளஹா  தோட்டத்தைச் சேர்ந்த 82 வயதுடைய  மாரியப்பன் என்பவரை வெள்ளிக்கிழமை (23) முதல் காணவில்லை என லிந்துலை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இவர், வெள்ளிக்கிழமை  காலை 10.30 மணியளவில் நாகசேனையில்  பஸ்ஸில் ஏறி லிந்துலையில்   இறங்கியதாகவும் அதன் பின் அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பில் தெரியவில்லை என்றும் உறவினர்கள் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், இறுதியாக சாம்பல் நிற ஜேர்ஸியும், சாரமும் அணிந்திருந்ததோடு கையில்  மப்லர் ஒன்றும் வைத்திருந்ததாக அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள்,  0771262934 என்ற இலகத்துடன் தொடர்புகொண்டு அறியத்தருமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .