Sudharshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
கொத்மலை, கட்டுக்கித்துலை, ஹெல்பொட தோட்டத்தில் அநாதரவாக இருந்த முச்சக்கரவண்டியிலிருந்து தப்பியோடியதாக கூறப்படும் 10 வயதுச் சிறுமி, தனது பெற்றோருடன் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
'குறித்த முச்சக்கர வண்டியிலிருந்தது எமது பிள்ளையின் உடைகளே. நாமே அவற்றை எடுத்துவரும்படி சாரதியிடம் கூறியிருந்தோம். அதை எடுத்துவந்தவர் எமது மகளுக்கு மாமா முறையாகும்' என குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், குறித்த நபரை தொடர்ந்து விசாரணை செய்து வருவதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெல்பொட தோட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மாணவியின் சீருடை மற்றும் உள்ளாடைகள் இருப்பதை அவதானித்ததையடுத்து, அடுத்து அங்கு குழுமிய மக்கள், அந்த முச்சக்கரவண்டியின் சாரதியை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago