Sudharshini / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரிஸ் என்டனி
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடனே நிலமேயாக சேவையாற்றிய கடந்த பத்து வருட காலத்தில், சமய, சமுக பணிகளுக்காக சுமார் 1,200 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீ தலதா மாளிகைக்கு மீண்டும் தியவடன நிலமேயாக தெரிவாகியுள்ள பிரதீப் நிலங்கவுக்கு, அவரது சொந்த ஊரான இரத்தினபுரி நிவித்திகலையில் வரவேற்பளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'சப்ரகமுவ சமன் தேவாலயத்தில் 23 வயதில் பஸ்னாயக்க நிலமேயாகவும் அதன் பின்னர் கதிர்காம தேவாலயத்தில் பஸ்னாயக்க நிலமேயாகவும் செயற்பட்டதன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவத்தைக் கொண்டு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயாக கடந்த பத்து வருடங்கள்; கடமையாற்றினேன்.
கடந்த பத்து வருடக் காலத்தில் தலதாமாளிகைக்கு கிடைத்த நிதியின் மூலம் வியாதிஸ்தர்களுக்கு சங்கைக்குரிய பிக்குகளின் கல்வி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக பத்து மில்லியன் ரூபாய், பாடசாலை மாணவர்களுக்கு 30 மில்லியன் ரூபாய், பல்லேகல பௌத்த நிலையம் மற்றும் தலதா மாளிகையின் மீள்கட்டுமாணப் பணிகளுக்கு 13 மில்லியன் ரூபாய் உட்பட சுமார் 1,200 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் ஒன்றை எதிர்காலத்தில் அமைக்க 140 மில்லியன் ரூபாயும் தனியான சமய தொலைக்காட்சி அலைவரிசையை ஏற்படுத்த 500 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என அவர் கூறினார்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago