2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வர்த்தக நிலைய உரிமையாளருக்கு அபராதம்

Kogilavani   / 2017 மார்ச் 21 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு, பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் ரூவந்திகா மாரசிங்க, பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடும் எச்சரிக்கையும் விடுத்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

பதுளை, ஹாலி-எல போகாமடித்தப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கே, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சபையின் பதுளை மாவட்ட அதிகாரிகள், மேற்படிப் பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, மேற்படி வர்த்தக நிலைய உரிமையாளர், பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்தே, மேற்படி நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .